நடிகர் வடிவேலு குணமடைந்தார்

உலகம் முழுவதும் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதிதாக ஆரம்பித்த ஓமிக்ரான் தொற்று கொஞ்சம் பரவி வருவதாக சொல்லப்படும் நிலையில் நடிகர் வடிவேலுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.\

இந்த நிலையில் மருத்துவமனையில் ஒரு வார காலமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட வடிவேலு முழு குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய் சேகர் படப்பிடிப்பில் இவ்வாறு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் நீண்ட நாட்கள் கழித்து வடிவேலுவை திரையில் பார்க்க போகிறோம் என்று நினைத்த ரசிகர்களுக்கு சற்று வருத்தமாக இருந்தது.

தற்போது வடிவேலு குணமடைந்த உடன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment