காவல்துறை முதல் நீதிபதி வரை… இவர் போடாத வேடமே இல்லை… தமிழ் திரையுலகில் வி.கோபாலகிருஷ்ணன்!

தமிழ் சினிமாவில் மறக்கவே முடியாத குணச்சித்திர  நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் எம்ஜிஆர் சிவாஜி காலத்து முதல் கமல் ரஜினி காலம் வரை ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் வி கோபாலகிருஷ்ணன். நீதிபதி, காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர், டாக்டர், ரெளடி, கொள்ளைகூட்டத்தின் தலைவன் என பல்வேறு வேடங்களில் வில்லன், நகைச்சுவை, குணசித்திரம் என அவர் நடிக்காத கேரக்டரே இல்லை என்று சொல்லலாம்.

திருச்சியை சேர்ந்த வி கோபாலகிருஷ்ணன் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். 9 வயதிலேயே அவர் தனது முதலாவது திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒரு பக்கம் நடிப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். இந்த நிலையில் 1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் ஒரு ஆபீஸ் பாயாக நடிக்க ஆரம்பித்து திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

என்.ஒ.சி வாங்கி வந்தால் தான் நடிப்பேன் என கூறிய ஜெமினி.. படப்பிடிப்பு நேரத்தில் மனைவிக்கு பிரசவம்.. ஓடி வந்து உதவி செய்த சிவாஜி..!

அதன் பிறகு 50களில் ஒருசில படங்களில் நடித்தாலும் 60களில் தான் அவர் பிஸி ஆனார். எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல திரைப்படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்திருக்கிறார். படிக்காத மேதை, காத்திருந்த கண்கள், பொம்மை, கலங்கரை விளக்கம், நீர்க்குமிழி, பாலாடை, லட்சுமி கல்யாணம், அன்னையும் பிதாவும் என அவர் நடித்த படங்களை குறிப்பிட்டு சொல்லிக் கொண்டே போகலாம்.

v. gopalakrishnan1

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புன்னகை என்ற படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான கேரக்டர் கொடுக்கப்பட்டு இருக்கும். அதே போல் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான வெள்ளி விழா படத்தில் அசத்தியிருப்பார். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் உள்பட பல படங்களில் நடித்த அவர் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர்களின் படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு விஜயசாந்தி, ராம்கி நடித்த தடயம் என்ற திரைப்படம் தான் அவர் நடித்த கடைசி திரைப்படம். அதனை அடுத்து 1998 ஆம் ஆண்டு அவர் காலமானார். தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து குணச்சித்திர வேடத்திலும் சாதிக்கலாம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் தான் வி கோபாலகிருஷ்ணன்.

நடிகர் வி கோபாலகிருஷ்ணன், லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களும் தற்போது வெளிநாடுகளில் தங்களது குடும்பத்துடன் உள்ளனர். வி கோபாலகிருஷ்ணனின் வாரிசுகள் யாருமே சினிமா பக்கமே வரவில்லை. வி.கோபாலகிருஷ்ணன் சத்தமே இல்லாமல் பலருக்கு உதவி செய்திருப்பதாக கூறப்படுவது உண்டு.

தங்க சுரங்கம்: சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி திரைக்கதை..!

சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்த பலர் இவரைத்தான் போய் சந்திப்பார்கள். இவர்தான் பலருக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததாகவும், ஆனால் அது எதையுமே அவர் விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார். இவரால் திரையுலகிற்கு வந்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து அதன் பிறகு பிரபலமானவர்கள் அதிகம். மொத்தத்தில் தனது உன்னதமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் எப்போதும் அவர் குடியிருப்பார் என்பதுதான் உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...