நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் குடும்பத்தில் உயில் பிரச்சனை-மகள்கள் வாதம்!!

சினிமா என்று எடுத்தாலே முதலில் எம்ஜிஆர், சிவாஜி என்றுதான் ஆரம்பிப்போம். அந்த அளவிற்கு சினிமாவின் ஆரம்ப காலத்தில் இவர்கள் ஆற்றிய தொண்டு பெரிதாக காணப்பட்டது.  அதிலும் நடிகர் திலகமாக திகழ்ந்து கொண்டு வருகிறார் நடிகர் சிவாஜி கணேசன்.

இந்த நிலையில் சிவாஜிகணேசனின் குடும்பத்தில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் அவரின் மகள்கள் உரிமையியல் வழக்கு தொடுத்துள்ளனர்.

அதன்படி சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜி ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடுத்துள்ளனர். ஏனென்றால் சொத்துக்களில் தங்களுக்குரிய பங்கை பிரித்து தர உத்தரவிடுமாறு மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சொத்துக்களில் சம பங்கு என்று கூறி மூவரிடம் கையெழுத்து பெற்றார் ராம்குமார் என்றும் மகள்கள் கூறினர்.

1999 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத உயில் 2021 ஆம் ஆண்டில் தான் வெளிய வந்தது என்றும் மகள்கள் கூறினர். உயிலை மெய்ப்பித்து சான்று கூறிய வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறினார்.

சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என்றும் வாதிட்டு வருகின்றனர். மீண்டும் இன்றைய தினம் விசாரணை நடைபெறுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...