Connect with us

நிலாவில் இடம் வாங்கிய பிரபல நடிகர்

Entertainment

நிலாவில் இடம் வாங்கிய பிரபல நடிகர்

b09ba536af9475aa263bc6590fa2de31

பூமியில் இடம் வாங்குவதை விட பலர் நிலவில் இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி கேரக்டரில் நடித்தவருமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலவில் தான் இடம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து சுஷாந்த் சிங் நிலாவில் நிலம் வாங்கியுள்ளதாகவும், எனினும் அவர் சட்டரீதியாக அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நிலாவில் இடம் வாங்கிய முதல் பாலிவுட் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

8385ea39d3593b08836915741485ad09

பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத நிலவின் பின்பகுதியான மாரே மஸ்கோவியென்ஸ் என்ற பகுதியில் தான் ஒரு குறிப்பிட்ட நிலத்தை வாங்கியுள்ளதாக சுஷாந்த் சிங் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் சுஷாந்த்சிங் விண்வெளி சம்பந்தப்பட்ட ‘சந்தா மாமா தூர் கே’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இந்த படத்தின் புரமோஷனுக்காக தான் நிலவில் இடம் வாங்கியுள்ளதாக கூறுவதாகவும் பாலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top