நடிகர் சூர்யா எதிர்ப்பு: புதிய ஒளிப்பதிவு மசோதா நிறைவேறுமா?

19faa4ccf4b92e598854752a2c7a17b2

மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள புதிய ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பது அல்ல என மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய சட்டத்தின்படி ஏற்கனவே சென்சார் ஆன ஒரு திரைப்படத்தை மீண்டும் சென்சார் செய்ய கோரிக்கை விடலாம் என்பதும் கதை திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் செய்பவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ஒளிப்பதிவு திருத்த மசோதா கடந்த் 2019ஆம் ஆண்டு மாநிலங்களவை அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-ஆம் ஆண்டில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு ஜூலை 2 வரை அதாவது இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் கடைசி நாளான இன்று சூர்யா தனது டுவிட்டரில் இந்த திட்டத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவைப் போலவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த திட்டத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.