கல்வி நலனுக்காக முதல்வரிடம் நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி!!

தனது  நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்களிடையே நடிப்பின் நாயகன் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.சூர்யா  ஸ்டாலின்

இந்நிலையில் சினிமா துறை மட்டுமின்றி சமூக நிலையிலும் சூர்யா மிகுந்த ஆர்வம் கொண்டவராக காணப்படுவார்.மாணவர்களின் கல்வி மீது அதிகம் நாட்டம் கொண்டவராக நடிகர் சூர்யா உள்ளார்.

குறிப்பாக அகரம் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதுகாக்கப்படுகிறது. இதனால் சூர்யாவிற்கு மாணவர்கள் மத்தியிலும் நல்லதொரு மதிப்பான இடம் உள்ளது என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். பழங்குடி இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக இந்த ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் சூர்யா.

இதனை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் 2d நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கினார்.இதனால் இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment