தமிழில் நான்கே படங்கள்… பாலச்சந்தரின் ஒரே படத்தால் பிரபலமான பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீதர்!

இயக்குனர் இமயம் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீதர், தமிழில் நான்கு படங்களில் நடித்திருந்தாலும்  கன்னடம் மலையாளம் ஹிந்தி உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீதர் கர்நாடகாவை சேர்ந்தவர். கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்த இவர் நடன இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் முறையாக பரதநாட்டிய கலையை பயின்றவர். அவரது மனைவி அனுராதா என்பவரும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இருவரும் இணைந்து பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தியுள்ளனர்.  இவர்களது நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.

இந்த நிலையில் தான் நடிகர் ஸ்ரீதருக்கு கன்னடத் திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது 1984 ஆம் ஆண்டு அம்ருதா காலிகே என்ற கன்னட திரைப்படத்தில் மது என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாக கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மாட்டுச்சாணம் வாசம் ரொம்ப பிடிக்கும் : கிராமத்து விவசாயியான நடிகர் கிஷோர்

தமிழில் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ஸ்ரீதர் நடித்திருப்பார்.  இந்த படத்தில் நடிகை ரேவதியின் ரேடியோ பழுதாகிவிட அதை பாண்டியராஜன் எடுத்துக்கொண்டு மெக்கானிக்கிடம் செல்வார். அந்த மெக்கானிக்காகத்தான் ஸ்ரீதர் நடித்திருப்பார்.

ஆனால் அந்த ஒரு காட்சியில் மட்டுமே நடித்ததால் அவர் தமிழ் திரை உலகில் பெரிய அளவில் கவனத்தை பெறவில்லை. இந்த நிலையில் தான் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சுகாசினி நடித்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஸ்ரீதர் ஒப்பந்தமானார்.

கிட்டத்தட்ட  சுகாசினிக்கு ஜோடியாக அவர் அந்த படத்தில் நடித்திருப்பார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக இருக்கும் சுகாசினியை பல்வேறு முயற்சிக்குப் பிறகு தனது காதல் வலையில் ஸ்ரீதர் வீழ்த்துவார். பிறகு ஒரு சிறு பிரச்சனை காரணமாக இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த படத்தில் ஸ்ரீதர் மிக அருமையாக நடித்திருப்பார். அவரது நடிப்பு திறமையை  சூர்யா என்ற கேரக்டர் மூலம் முழுமையாக வெளியே கொண்டு வந்தது பாலசந்தர் தான். அடுத்ததாக சரிதா முக்கிய கேரக்டரில் நடித்த பூ பூத்த நந்தவனம் என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.

நடிகை ஜெயலலிதாவிற்கு நடன இயக்குனராக இருந்து அவருடன் ஜோடி போட்டு ஆடிய உலகநாயகன் கமல்!

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சரிதாவுக்கு இணையாக அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதனை அடுத்து பார்த்திபன் இயக்கத்தில் உருவான புதிய பாதை என்ற திரைப்படத்தில் டாக்டர் கேரக்டரில் ஸ்ரீதர் நடித்திருப்பார். இந்த கேரக்டர் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் ஒரு திருப்தியான கேரக்டராக அமைந்தது என்று ஸ்ரீதர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

புதிய பாதை படத்திற்கு பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் அதன்  பிறகு நீண்ட காலமாக தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார்.  பைரவி என்ற டைட்டில் உருவான இந்த படம் தேசிய விருது பெற்றது.

திரைப்படங்களில் மட்டும் இன்றி நடிகர் ஸ்ரீதர் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான திருவிளையாடல் மற்றும் பிருந்தாவனம் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

மொரட்டு வில்லனின் இளகிய மனசு.. நடிகர் நெப்போலியன் இப்படி ஒரு மனிதரா?

64 வயதாகும் ஸ்ரீதர் தற்போது  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் நடிக்கவில்லை என்றாலும் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். தனது மனைவியுடன் இணைந்து நடத்தி வரும் இந்த பரதநாட்டிய பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பரதநாட்டக் கலையை பயின்று வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...