“தேடிவந்த எம்பி பதவி!” நிராகரித்த நடிகர் சோனு சூட்!!

a0f825931f494e4f289590ec8216193c-1

தமிழ் சினிமாவில் தமிழ்  நடிகர்களுக்கே தற்போது ரசிகர்கள் கூட்டம் குறைந்து விட்டது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தனக்கு ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நடிகர் சோனு சூட். மேலும் இவர் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் ஆயினும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். மேலும் இவர் தமிழில் அருந்ததி என்ற படத்தில் கொடூர வில்லனாக காட்சியளித்தார். அதன் பின்னர் நடிகர் சிம்புவுடன் ஒஸ்தி என்ற திரைப்படத்தில் வில்லனாக தோன்றி நடித்துள்ளார்.36a98aed86fbb85ef9e669e0f850ca85

மேலும் தேவி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும்  இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. மேலும் இவர் பல ஏழைகளுக்கு உதவி செய்து வரும் குணத்தை உடையவராக காணப்படுகிறார். இந்நிலையில் அவர் அரசியல் வருவதாக வதந்திகள் வந்த நிலையில் அது குறித்து சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதன்படி தேடிவந்த எம்பி பதவியை நிராகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் மாநிலங்களவை எம்பி பதவியை ஏற்குமாறு தனக்கு இரண்டு முறை அழைப்பு வந்தது என்றும் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார். மேலும் இரண்டு வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த அழைப்பை நிராகரித்து விட்டதாக நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார், மேலும் அரசியலில் சேரும் எண்ணம் தனக்கில்லை என்று கட்சிகளிடம் கூறிவிட்டதாகவும் நடிகர் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார்,

நடிகர் சோனு சூட் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வருமான வரி சோதனை நடந்தநிலையில் தனக்கு வந்த எம்பி பதவி வாய்ப்பு குறித்து டுவிட்டரில்  விளக்கம் அளித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.