Entertainment
கொரோனாவால் பாதிப்பு அடைந்த நடிகர் சோனு சூட்!
இந்தியாவில் கொரோனா முதல் அலை மிக வேகமாக பரவிய போது ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், வெளிநாட்டில் சிக்கித் தவித்த மாணவ மாணவிகளுக்கும், கொரோனாவால் வேலை இழந்து வாடிய பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உதவி செய்தவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே.
அவர் செய்த உதவிக்காக அவரை ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்தி வணங்கி வருகின்றனர் என்பதும் தெலுங்கானா மாநிலத்தில் அவருக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது தன்னைத்தானே வீட்டின் தனிமை படித்துக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இருப்பினும் தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தன்னை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் விரைவில் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஓய்வு நேரத்தை நான் பொதுமக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று சிந்திக்க கிடைத்த நேரமாக எடுத்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
???? pic.twitter.com/2kHlByCCqh
— sonu sood (@SonuSood) April 17, 2021
