கைவிட்ட வடிவேலு.. முதல் ஆளாக முந்திய சிம்பு.. வெங்கல்ராவுக்கு குவியும் உதவிகள்..

வடிவேலுவுடன் 30-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து, ரசிகர்களைக் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தவர்தான் நடிகர் வெங்கல்ராவ். 1980-களின் இறுதியில் சினிமா துறைக்குள் சண்டைக் கலைஞராக என்ட்ரி ஆனவர். பார்க்கவே ஆஜானுபாகுவான தோற்றமும், முரட்டு உருவமும் கொண்ட வெங்கல்ராவ் பல ஹீரோக்களுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போட்டு நடித்திருக்கிறார்.

அதன்பின் வடிவேலுவின் காமெடி டீமில் இணைந்தார். வடிவேலுவுடன் பிரபலமான நகைக்சுவைக் காட்சிகளில் வெங்கல்ராவின் பங்கு அதிகம். குறிப்பாக கந்தசாமி படத்தில் தேங்காய் காமெடி, சீனா தானா 007 படத்தில் தலையில் வைத்த கையை எடுத்தால் கடித்து வைக்கும் காமெடி போன்றவை பிரபலாக இன்றும் காமெடிச் சேனல்களை ஆக்கிரமிப்பவை. மேலும் மீம்ஸ்களிலும் வெங்கல்ராவ் புகைப்படங்கள் வைரலாக வரும்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கல்ராவ் தற்போது உடல்நலம் குன்றியிருப்பதால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கல்ராவ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் தனக்குக் கை, கால்கள் சரிவர இயங்கவில்லை என்றும், வாய் பேசவும் முடியவில்லை என்றும் சினிமா நட்சத்திரங்கள் தனக்கு உதவும் படியும் மிக உருக்கமாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

ரோட்டுக் கடையில் சாப்பிட்ட நீடா அம்பானி.. வைரலாகும் புகைப்படம்

இந்த வீடியோ வைரலான நிலையில், வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் என்பதால் வடிவேலு உதவக் கூடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை வடிவேலு தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சிம்பு, வெங்கல் ராவின் உடல்நிலையை அறிந்து அவருக்கு ரூ.2இலட்சம் மருத்துவ உதவிக்காக வழங்கியுள்ளார். பல நலிந்த சினிமா கலைஞர்களுக்கு உதவி செய்து வரும் சிம்பு தற்போது இவருக்கும் உதவியிருக்கிறார்.

ஆனால் கூடவே நடித்துப் பெயர் பெற்ற வடிவேலுவோ இன்னும் எந்த உதவியும் செய்யாதிருப்பது கண்டு நெட்டிசன்கள் வடிவேலுவை விமர்சித்து வருகின்றனர். அண்மையில் வடிவேலு டீமில் இருந்த மறைந்த நடிகர் போண்டா மணி போன்றோருக்கும் வடிவேலு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் வெங்கல்ராவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews