சசிக்குமாருக்கு இப்படி ஒரு நல்ல மனசா? அயோத்தி பட இயக்குநரை உண்மையாகவே நெகிழ வைத்த தருணம்

தமிழ்சினிமாவில் அத்திபூத்தாற்போல் அவ்வப்போது சில நல்ல படங்கள் வருவதுண்டு. அப்படி கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி விமர்சனத்திலும், மக்கள் மத்தியிலும், வசூலிலும் நல்ல வரவேற்பினைப் பெற்ற படம் தான் அயோத்தி. அப்துல் மாலிக்காக சசிக்குமார் இந்தப் படத்தில் இயல்பாக நடித்திருப்பார். பொதுவாகவே சசிக்குமார் படங்களில் நட்பு, உதவி, சமூகம் என ஆழமான கருத்துக்கள் இருக்கும். அந்த வகையில் இப்படி ஒரு கதைக்கு சசிக்குமாரைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் மந்திரமூர்த்திக்கு ஒரு ராயல் சல்யூட்.

இயக்குநர் மந்திரமூர்த்தி இந்தக் கதையைத் தயார் செய்து பல தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்திருக்கிறார். யாருமே தயாரிக்க முன்வராத தருணத்தில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் கடைசியாக முன்வந்தது. இந்தக் கதையை தயாரிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அனைவருமே கேட்டனர். தயாரிப்பாளருக்கு மிகவும் கதைபிடித்துப் போனது இருப்பினும் டாக்குமெண்டரி படமாக வந்து விடும் எனவே சற்று கமர்ஷியலை சேர்த்து எடுப்பதாக இருந்தால் தயாரிக்கிறேன் என்று கூற இயக்குநர் மந்திர மூர்த்தியும் ஒப்புகொண்டு படத்தினை இயக்கினார்.

படத்திற்கு சசிக்குமார் தான் ஹீரோ என்பதில் உறுதியாக இருந்ததால் தயாரிப்பு நிறுவனம் சசிக்குமாரை அழைத்துப் பேச அவரும் உடனே ஒகே சொல்லி நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட கதை உடனடியாக ஷுட்டிங்குக்கு தயாரானது. ஹிந்தி நடிகர் யாஷ்பால் ஷர்மாவும் படத்தில் இணைந்தார். இந்நிலையில் படம் ஷுட்டிங் கிளம்புவதற்கு முன்னதாக இயக்குநர் மந்திரமூர்த்திக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

ஏன் அஜீத் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?.. ஹெச்.வினோத் சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு

மருத்துவமனையில் பரிசோதனை செய்கையில் அவருக்கு அப்பண்டீஸ் நோய் என்று கண்டறிய மறுநாள் ஷுட்டிங்வேறு. முதல் படம். என்னசெய்வது என்று தெரியாமல் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்துக் கொண்டிருந்த மந்திரமூரத்திக்கு சசிக்குமார் தான் இயக்குநர் பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் குணமாகி வந்தபின் படத்தைத் தொடர்ந்து இயக்குங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் மந்திரமூர்த்தி அதற்கு உடன்படவில்லை. ஏனெனில் முதல் படத்திலேயே இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. ராசியில்லாத இயக்குநர் என்று பச்சைகுத்தி விடுவார்களோ என்ற பயம் வேறு. இதனால் மறுநாளே அறுவை சிகிச்சை செய்து அதற்கு அடுத்த நாளே வயற்றில் பெரிய கட்டுடன் ஷுட்டிங் வந்திருக்கிறார்.

தொடர்ந்து ஷுட்டிங் பணிகளை முடித்துவிட்டு மாலை மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆகிவிடுவார். இப்படியே தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேல் மருத்துவமனைக்கும், ஷுட்டிங்கிற்கும் சென்று படத்தை எடுத்திருக்கிறார் மந்திரமூர்த்தி. இதனைக் கவனித்த சசிக்குமார் தயாரிப்பாளரிடம் இயக்குநரின் இந்த வெறியைக் கண்டு கண்டிப்பாக படம் சக்சஸ் ஆகும் என்று கூறியிருக்கிறார்.

சசிக்குமார் கணித்தது போலவே அயோத்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...