அந்த மாதிரி கேரக்டருக்கு ஆள் தேடிய நடிகர்.. இயக்குநர் வெங்கட்பிரபு உடனே எடுத்த திடீர் முடிவு..

தென்னிந்தியத் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய தனித்துவ நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சம்பத் ராஜ். கதை எழுத்தாளரும் கூட. இயக்குநர் வெங்கட்பிரபுவின் நண்பர். பெரும்பாலும் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் பிரேம்ஜி, வைபவ் போன்றோர் இருப்பது போல சம்பத் ராஜும் இருப்பார். சென்னை 28, சரோஜா படங்களில் சம்பத்ராஜ் வில்லனாக மிரட்டியிருப்பார்.

இதனைத் தொடர்ந்து கோவா படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்தப் படம் அவருக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றுக் கொடுத்தது. கோவா படத்தின் கதையின் ஒன்லைனை சம்பத் ராஜ் இயக்குர் வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார். இதனை ஹிந்தியில் படமாக்கும் முயற்சியில் இருந்திருக்கிறார். அப்போது வெங்கட் பிரபு இந்தக் கதையை நானே இயக்குகிறேன் என்று கூற சம்பத்தும் ஒகே சொல்லியிருக்கிறார்.

அப்போது சம்பத் ராஜ் இக்கதையில் வரும் ஒரினச் சேர்க்கையாளர் கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று வெங்கட்பிரபுவிடம் கேட்டிருக்கிறார். அப்போது வெங்கட்பிரபு ஒருத்தன் இருக்கான் அவன் இந்தக் கதாபாத்திரத்திற்கு அருமையாக இருப்பான். ஆனால் நடிப்பானா என்று தெரியவில்லை.

புரோட்டா காமெடியில் உண்மையாகவே சூரி எத்தனை புரோட்டா சாப்பிட்டார் தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்

அவனுடைய இமேஜ் போய்விடுமே என்று யோசிப்பான் என்று கூற, சம்பத் ராஜ் வெங்கட்பிரபுவிடம் நடிகன் என்றால் இந்தமாதிரி சவாலான கதாபாத்திரங்கள் இருந்தால் தான் அவன் நடிகன் என்று கூற வெங்கட்பிரபு அப்போ நீயே நடி என்று கூற மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு கோவா படத்தின் ஓரினச் சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் சம்பத்ராஜ்.

இதில் பிரேம்ஜியை அவர் விரும்புவதுபோல் நடித்திருப்பார். பெரும்பாலும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் வளர்ந்து வரும் நடிகர்கள் நடிப்பது அபூர்வமே. ஆனால் சம்பத்ராஜ் தன்னுடைய அப்போதை இமேஜை பொருட்படுத்தாது நல்ல கதாபாத்திரம் என்ற நோக்குடன் கோவா படத்தில் நடித்தார்.  படமும் சூப்பர் ஹிட் ஆனது. நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...