பிரபல நடிகர் ரோபோ சங்கருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில் உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு ரக அலெக்சாண்டர் கிளிகளை வளர்த்ததன் காரணமாக கடந்த 15ஆம் தேதி அன்று வனத்துறை அதிகாரிகள் ரோபோ சங்கர் வீட்டில் இருந்து கிளிகளை பறிமுதல் செய்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் வீட்டில் உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் 2.5 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.