ரஜினியை விட எனக்கு அதிகமா சம்பளம் கொடுங்க.. தமிழ் ஹீரோக்களில் முதன் முதலாக 1 கோடி சம்பளத்தைத் தொட்ட ராஜ்கிரண்

இன்று சினிமா ஹீரோக்களின் சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று அதிர வைக்கும் சூழலில் 1999ம் ஆண்டிற்கு முன்னர் வரை 1 கோடி சம்பளமே ஹீரோக்களின் உச்சபட்ச சம்பளமாக இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமே இந்த சம்பளத்தினை எட்டியிருக்கின்றனர்.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் நடிகர் ராஜ்கிரண் ஒரு படத்திற்காக 1 கோடியே 10 இலட்சம் சம்பளம் பெற்று திரையுலகின் முன்னனி நட்சத்திரங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ராமநாதபுரத்தில் பிறந்த ராஜ்கிரண் சென்னையில் சினிமா விநியோகஸ்தராக தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து பல படங்களை விநியோகித்து வந்தவருக்கு சினிமாவின் நெழிவு, சுழிவு அனைத்தும் அத்துப்படி ஆகியிருக்கிறது. எந்த மாதிரி படங்கள் ஓடும், ஓடாது என தெளிவாகக் கணித்து அதன்படி படங்களை வாங்கி விநியோகம் செய்தார்.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு தான் நடிக்கலாம் என முடிவு செய்து தனது சொந்த தயாரிப்பில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்தார். இப்படத்தில் கஸ்தூரிராஜாவை இயக்குநராகவும், வடிவேலுவையும் அறிமுகப்படுத்தினார். மீனாவுக்கும் இது முதல் ஹீரோயின் படம்.

இப்படி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்தது. இதனையடுத்து தனது அடுத்த படமான அரண்மனைக்கிளி படத்தினையும் தயாரித்து இயக்கி நடித்தார். இந்தப் படமும் ஹிட்.

மேலும் அடுத்தபடமான எல்லாமே என் ராசாதான் படத்தினைத் தயாரித்து இயக்கி நடித்தார் இதுவும் சூப்பர் ஹிட். இப்படி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார் ராஜ்கிரண். இதனால் அவரின் மார்க்கெட் மதிப்பு உச்சத்தில் இருந்தது.

பாரதியாரின் மீசை, கோட் ரகசியம் இதான்.. யாரும் தெரியாத பாரதியாரைப் பற்றிய அரிய தகவல் சொன்ன எள்ளுப்பேரன்

இதனையடுத்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா மாணிக்கம் என்ற படத்தினைத் தயாரித்தார். இப்படத்திற்காக ராஜ்கிரணை அணுகிய போது அப்போது ரஜினி முதன் முதலாக 1 கோடி சம்பளத்தைத் தொட்டிருந்தார். எனவே ராஜ்கிரண் ரஜினி இப்போது 1 கோடி சம்பளம் பெறுகிறார்.

அதே 1 கோடி எனக்கும் வேண்டும் என்று கூற, தயாரிப்பாளர் டி.சிவா அதனைக் காட்டிலும் கூடுதலாக 1 கோடியே 10 இலட்சம் சம்பளம் கொடுத்து மாணிக்கம் படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. முதல் மூன்று படங்களில் தொடர் வெற்றியைக் கொடுத்த ராஜ்கிரண் உச்ச நடிகர்களைக் காட்டிலும் அதிக சம்பளம் பெற்ற போதும் அந்தப் படம் சுமாரான வெற்றியையே பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...