தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடத்து வருகிறார்.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிகை தமன்னா, ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நேற்றைய தினத்தில் ஹைதராபாத்தில் நேரில் சந்தித்தாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் சூப்பர்ஸ்டாருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றுள்ளார்.
இவர்களுடைய சந்திப்பானது தொழில் மற்றும் தனிப்பட்ட முறையில் சந்திருக்கலாம் என சினிமா வாட்டாரங்களில் பேசப்படுகின்றனர்.
இருப்பினும், முன்னாள் முதல்வருடன் அரசியல் களத்தில் இறங்க உள்ளரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் இவர்களின் சந்திப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
It was a pleasure to meet and interact with my dear friend 'Thalaivar' @rajinikanth today! pic.twitter.com/b8j1BxICEF
— N Chandrababu Naidu (@ncbn) January 9, 2023