ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? அதிர்ச்சி தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்த நிலையில் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின்படி ரஜினிகாந்துக்கு ரத்தநாள குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த பாதிப்பை சரி செய்யும் சிகிச்சைகளில் தற்போது மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதயத்துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெற்றால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ரஜினியின் உடல் நலம் தற்போது நலமாக இருப்பதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருடைய உறவினரும் நடிகருமான ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment