கர்நாடகாவை கலக்கிய நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!

கன்னட திரை உலகின் ஜாம்பவானாக உள்ளவர் நடிகர் புனித் ராஜ்குமார். அஜய், அரசு, வம்சி இப்படி பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துள்ளார் நடிகர் புனித் ராஜ்குமார்.புனித் ராஜ்குமார்

இந்நிலையில் இன்று காலை அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அவர் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் நடிகர் புனித் ராஜ்குமார் காலை  11:30 மணிக்கு  அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்திருந்தார். ஆயினும் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.

இதனால் பெங்களூருவில் பதட்டமான நிலைமை உருவாகும் என்று எண்ணி அங்கு போலீஸ் அதிகமாக குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.நடிகர் புனித் ராஜ்குமார் அவரின் உயிரிழப்பு அவரின் குடும்பத்தினருக்கும் இது மிகப்பெரிய இழப்பாக காணப்படுகிறது

அவர் சம்பாதித்த ஏராளமான ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. அவர் நடிப்பில் இறுதியாக யுவர்த்தன என்ற படம் ஏப்ரல் மாதத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment