கங்கை அமரன் வீட்டில் டும் டும் டும்.. ஒரு வழியாக மாப்பிள்ளையான பிரேம்ஜி… கல்யாண தேதி குறிச்சாச்சு..

கங்கை அமரனின் இளைய மகனான நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜிக்கு கல்யாண தேதி குறித்தாகி விட்டது. சமூக வலைதளங்களில் பத்திரிக்கையை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தன் சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படம் மூலம் தமிழ்சினிமாவில் என்ட்ரி ஆன பிரேம்ஜி தொடர்ந்து கோவா, மாசு, சரோஜா, பிரியாணி, மங்காத்தா, மாநாடு என வெங்கட்பிரபுவின் படங்களிலும், சேட்டை போன்ற படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

சொல்வேந்தர் எனப் போற்றப்படும் சுகி.சிவம்… இந்தப் பெயர் உருவான சுவாரஸ்ய வரலாறு..

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும், பின்னனி பாடியும் இருக்கிறார்.

தற்போது பிரேம்ஜிக்கு 44 வயதாகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த வருடம் எனக்கு திருமணம் ஆகப் போகிறது எனத் தெரிவித்திருந்தார். தற்போது அது மெய்யாகும் வகையில் கல்யாணப் பத்திரிக்கை சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது.

அடுத்த மூக்குத்தி அம்மனாக தரிசனம் காட்ட போகும் திரிஷா…சாமி ஹீரோயினுக்கே சாமி கெட்டப்-ஆ?

அதில் வருகிற 09.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் திருத்தணி முருகன் கோவிலில் பிரேம்ஜிக்கும், மணமகள் இந்துவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேம்ஜியின் இந்தத் திருமணம் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதிலும் மொரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி தற்போது புதுமாப்பிள்ளை ஆகப் போகிறார். அவரின் திருமணப் பத்திரிக்கை இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இவரின் அண்ணனான வெங்கட்பிரபுவிற்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...