அதெப்படி நீங்க என்ன அந்த கேள்வி கேட்கலாம்..? பிரபுவிடம் கோபித்த எம்.எஸ்.பாஸ்கர்

டப்பிங் கலைஞராக 1000-க்கும் மேற்பட்ட படங்களில் தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர் தற்போது குணச்சித்திர நடிப்பிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங் பட திரைக்கதை புத்தகம் வடிவில் ஆஸ்கர் அகாடமி நூலகம் வரை சென்றுள்ளது பெருமைக்குரியது. இப்படி தான் தேர்ந்தெடுத்தும் நடிக்கும் படங்களில் தனி முத்திரை பதித்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். சின்னபாப்பா பெரியபாப்பா சீரியல் இவருக்கு பெரிய கம்பேக் கொடுக்க தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக மொழி, எங்கள் அண்ணா போன்ற படங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் எம்.எஸ்.பாஸ்கர். இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கரின் எவர்கீரின் காமெடிகளில் ஒன்றுதான் குரு என் ஆளு படத்தில் வரும் கோபால்-லதா கதாபாத்திரங்கள். சின்னக் கலைவாணர் விவேக் பெண் வேடம் தரித்து லதா லதா கதாபாத்திரத்திலும், கோபாலாக எம்.எஸ்.பாஸ்கரும் அடிக்கும் லூட்டிகள் கண்களில் நீர் வர சிரிக்க வைக்கும்.

சொந்தப் படத்தை விட தலைவா படம் கொடுத்த புகழ்.. சாம் ஆண்டர்சன் ‘ராசாத்தி..’ பாடல் உருவான விதம்

இந்தக் காமெடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்- சரோஜாதேவி நடிப்பில் வெளியான புதிய பறவை படத்தின் காப்பி என்பது அனைவருக்கும் தெரியும். புதிய பறவை படத்தில் சரோஜாதேவியை உருகி உருகி காதலிக்கும் சிவாஜி கணேசன் கதாபாத்திரங்களைப் போன்றே விவேக் – எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.

குரு என் ஆளு படத்தின் இந்தக் காமெடியைப் பார்த்த இளைய திலகம் பிரபு எம்.எஸ்.பாஸ்கரை போனில் தொடர்பு கொண்டு, “என்ன அப்பாவை கிண்டல் பன்றீங்களா?” என்று கேட்டுள்ளார். அப்போது எம்.எஸ். பாஸ்கர் பிரபுவிடம் எங்கள் அப்பாவை மாதிரி யாராவது நடிக்க முடியுமா? இந்தக் காமெடியில் வேறு யாராவது நடித்திருந்தால் தான் அது கிண்டல் செய்வது மாதிரி இருந்திருக்கும்.

சிவாஜி ஐயா எனது தந்தை போன்றவர். அவர் கதாபாத்திரம் ஏற்று நடிப்பது எனக்கு பெருமையே. இதில் கிண்டல் ஏதும் பண்ணவில்லை. நீங்கள் மட்டும் ஒருபடத்தில் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி-சொக்கன் போல நடித்திருக்கிறீர்கள் அப்போ நீங்கள் கிண்டல் செய்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

நடிகர் திலகத்தின் மீது எம்.எஸ்.பாஸ்கர் கொண்ட உண்மையான அன்பை அப்போதுதான் புரிந்து கொண்டாராம் பிரபு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...