சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரபாஸ்… டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்..!!!!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானர் நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இந்நிலையில் புராண கதைகளில் ஒன்றாக கருதப்படும் ராமாயணத்தை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற படம் இருவாகி வருகிறது. இந்த படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.

அதே போல் ராவணனாக சயீப் அலிகான் மற்றும் சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், சமூக ஆர்வலர்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதன் படி, இலங்கையை சேர்ந்த ராவணன் சிவ பக்தர் சுமாஎ 64 கலைகள் கற்றவர் என்ற நிலையில் இவருக்கு ஜாக்கெட் அணிந்து, நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் தவறாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய செயலானது வரலாற்றை மாற்றியமைக்கும் என்பதால் விவகாரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.