நாடு சுதந்திரம் அடைந்ததை தமிழில் முதலில் ரேடியோவில் சொன்ன அறிவிப்பாளர்.. நடிகராக சாதித்த வரலாறு!

நாட்டின் சுதந்தப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். அனைவரும் எப்போது ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எண்ணியிருந்த நேரம். அதற்கான நேரம் 1947 ஆகஸ்ட் 15-ல் வந்தது. அப்போது எந்தத் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலகட்டம் வானொலி ஒன்றைத் தவிர.  ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக இருந்த ஒருவர்தான் அந்தச் செய்தியை அறிவிக்க ஒட்டுமொத்த இந்தியாவே சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தது.

அன்றைய தினம் அது அதிகாலை 5.30. டெல்லியிலிருந்து தமிழ்ச்சேவை செய்திகள் ஒலிபரப்ப தயாராக இருந்தது. அப்போது ஒலித்த குரல் தான் “வணக்கம் ஆல் இண்டியா ரேடியோ… செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது!’ என்று தேச வரலாற்றின் முக்கியத் திருப்பத்தைச் செய்தியாக வாசித்தவர் தான் பூர்ணம் விஸ்வநாதன். நமது நாடு சுதந்திரத்தின் பொன் விழாவைக் கொண்டாடியபோது, பூர்ணம் விஸ்வநாதனுக்கு இதற்காக கௌரவம் செய்து விழா எடுத்தது சென்னை வானொலி நிலையம்.

தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர்.. ஆந்திராவுக்கு என்.டி.ஆர்.. நாடே கொண்டாடிய இரு சூப்பர் ஸ்டார்களின் நட்பு

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணம் விஸ்வநாதன் தன்னுடைய 24-வது வயதில் அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையத்தில், செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். மகாத்மா காந்தி தங்கியிருந்த இடத்தைக் கடந்தே தினசரி வானொலி நிலையத்துக்குச் சென்று வந்த விஸ்வநாதன், மேலும் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் பலமுறைக் கலந்து கொண்டு அவரது அறிவுரைகளால் ஈர்க்கப்பட்டார்.

நாடகத் துறையின் மீதும் தீராத ஆவல் கொண்ட பூர்ணம் விஸ்வநாதன் எழுத்தாளர் சுஜாதாவின் நட்புக் கிடைக்க நாடகம் மற்றும் சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தார். பின்னர் சென்னை வந்து சுஜாதாவின் பிரபல கதைகளை நாடகமாக அரங்கேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார் பூர்ணம் விஸ்வநாதன்.  ‘ஊஞ்சல்’ நாடகத்தில் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பைப் பார்த்து அரங்கமே அழுத காலம் ஒன்று உண்டு.

அதன்பின் சினிமாவில் நுழைந்து சிறந்த குணச்சித்திர நடிகராக தன் கலைப்பயணத்தைத் தொடர்ந்தார். ஆசை படத்தில் சுவலட்சுமியின் அப்பாவாக இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. மேலும் வருஷம் 16, மகாநதி, கேளடி கண்மணி, மூன்றாம் பிறை, தில்லுமுல்லு போன்ற படங்களிலும் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பூர்ணம் விஸ்வநாதன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews