கிராமத்து கேரக்டர்களில் அசத்திய பெரிய கருப்புத்தேவர்.. விருமாண்டி படத்தில் கலக்கியவர்..!

தமிழ் சினிமாவில் கிராமத்து வேடத்திற்கு என்று பிறந்தவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். அவ்வாறு கிராமத்து வேடங்களில் பல வருடங்களாக தமிழ் திரை உலகில் கலக்கியவர் பெரிய கருப்பு தேவர். நடிகர் பெரிய கருப்பு தேவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் என்ற பகுதியில் பிறந்தவர்.

நாடக உலகின் தந்தை என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக குழுவில் இடம் பெற்று பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கிராமத்து நாட்டுப்புற பாடல்களை பாடுவதில் வல்லவர். இவரது பாடல் திறமையை தமிழ் திரை உலகம் பயன்படுத்தி கொள்ளாவிட்டாலும் கமல்ஹாசன் தனது விருமாண்டி படத்தில் இவரை ஒரு பாடலை பாட வைத்தார்.

கமல், ரஜினியின் அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நடிகர்… அறிவுரையைக் கேட்டு சூப்பர்ஸ்டார் ஏற்ற சபதம் இதுதான்..!

பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் மாரி என்ற வேலைக்காரர் கேரக்டரில் அறிமுகமான பெரிய கருப்பு தேவர் அதன் பின்னர் சில வருடங்களாக திறக்கப்படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மோகன் நடிப்பில் உருவான தீர்த்த கரையினிலே என்ற படத்தில் மீண்டும் நடித்தார்.

விஜயகாந்தின் தெற்கத்திக் கள்ளன், ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா, சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், முரளி நடித்த நானும் இந்த ஊருதான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் கிராமத்து கேரக்டர் தான். அதில் அவரது நடிப்பு உயிரோட்டமாக இயல்பாக இருக்கும்.

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜ்கிரண் நடித்த எல்லாமே என் ராசாதான் என்ற திரைப்படத்தில் அவர் அசத்தலாக நடித்திருப்பார். இந்த நிலையில் தான் கமல்ஹாசனின் விருமாண்டி திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர் கோவில் பூசாரியாக நடித்து அசத்திருப்பார்.

அவரது நடிப்புக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் இடம்பெற்ற கருமாத்தூர் காட்டுக்குள்ளே என்ற பாடலையும் இவர் பாடினார். இசைஞானி இளையராஜா இந்த பாடலை பெரிய கருப்புத்தேவர் பாடியவுடன் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதன் பிறகு சந்திரமுகி, வெயில், மணிகண்டா, கூடல் நகர், பூ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தர் சி நடித்த முரட்டுக்காளை என்ற திரைப்படத்தில் இவர் மீனாவின் தாத்தாவாக நடித்திருந்தார்.

பெரிய கருப்பு தேவரின் மகன் பால்பாண்டி என்பவருக்கு குழந்தை பிறந்தது என்ற சந்தோஷத்தில் நான் உடனே பேரனை பார்க்க போறேன் என்று தனது குடும்பத்தினரிடம் இவர் மகிழ்ச்சியாக கூறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.

இவர் பேர் சொல்வதும் பெருமை கொள்வதும் சினிமாவுக்கே அழகு… நடிகர் திலகத்தின் அசத்தலான ஆறு படங்கள்!

பெரிய கருப்பு தேவரின் திரை உலக சேவையை பாராட்டி அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அளித்துள்ளது. மேலும் பெரிய கருப்பு தேவரின் மகன் விருமாண்டி என்பவர் தான் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ ரணசங்கம்’ என்ற படத்தை இயக்கியவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews