40 வருடங்கள் மேனேஜர் வேலை பார்த்து கொண்டே நடிப்பு.. 7000 நாடகங்கள் நடித்த நீலு..!

முழு நேரமாக நடிப்பில் ஈடுபடுபவர்கள் கூட நடிக்க முடியாத அளவிற்கு 7000 நாடகங்களை ஒரு நடிகர், ஒரு நிறுவனத்தின் மேனேஜர் என்ற வேலையையும் பார்த்துக் கொண்டே நடித்தார் என்றால் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா, ஆம் அதுதான் நடிகர் நீலுவின் சாதனை என்று கூறலாம். பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகர் நீலு கேரளாவில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது சென்னையில் தான். சென்னையில் பள்ளி படிப்பை முடித்து அவர் விவேகானந்தா கல்லூரியில் பட்ட படிப்பையும் பட்டம் மேற்படிப்பையும் முடித்தார்.

கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு நண்பர் ஆனவர் தான் நடிகர் எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சோ. கல்லூரி படிப்பை முடித்த பின்னர் அவர் விடி சுவாமி என்ற நிறுவனத்தின் மேனேஜராக பணியாற்றினார். அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததிலிருந்து ஓய்வு பெறும் வரை சுமார் 40 ஆண்டுகள் பணிபுரிந்தார். பணி புரிந்து கொண்டே அவர் தனது கலை தாகத்தையும் நாடகங்களில் நடிப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டார்.

700 படங்களுக்கும் மேல் நடித்த வில்லன் நடிகர்.. 2 படத்தை தயாரித்து பெரும் நஷ்டம்.. எஸ்.வி ராமதாஸ் திரைப்பயணம்..!

சோ தம்பி அம்பி என்பவருடன் இணைந்து அவர் முதலில் நாடகங்களை நடிக்க தொடங்கினார். அதன் பிறகு சோ நாடகங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் சோ நாடக கம்பெனியை நிறுத்திய பிறகு கிரேசி மோகன் நாடக கம்பெனியில் நடித்தார். கிரேசி மோகனுடன் நடிக்கும் போது தான் கமல்ஹாசனின் நட்பு கிடைத்ததை அடுத்து கமல்ஹாசனுடனும் அவர் பல திரைப்படங்கள் நடித்தார்.

சுமார் 7000 நாடகங்களில் நடித்துள்ள நடிகர் நீலு சுமார் 160 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சோ கதை திரைக்கதை வசனத்தில் முத்தா சீனிவாசன் இயக்கத்தில் உருவான ஆயிரம் பொய் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான நீலு, அதன் பிறகு சிவாஜி கணேசனுடன் அருணோதயம், ஜெய்சங்கருடன் நூற்றுக்கு நூறு, சோவின் முகமது பின் துக்ளக் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!

சிவாஜி கணேசன் நடித்த பாரத விலாஸ் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நீலு, அதன் பின்னர் அவருடன் கௌரவம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த ரோஜாவின் ராஜா என்ற திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக கலக்கினார்.

ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்தார். கமல்ஹாசன் உடன் பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் உள்பட பல படங்களில் நடித்தார். விக்ரமுடன் அந்நியன் உள்பட சில படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் விடி சுவாமி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தயாரிப்பு மேற்பார்வை பணியையும் செய்தார்.

ஜெர்ரி என்ற படம் உள்பட பல படங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக அவர் பணிபுரிந்தார். திரைப்படங்களில் மட்டும் இன்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். விடாது சிரிப்பு, சிரி சிரி கிரேசி, சாக்லேட் கிருஷ்ணா போன்ற தொலைக்காட்சி தொடர்கள் அவரது நடிப்பில் பிரபலம் ஆகின.

தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற நீலு, சாந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவருமே வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளனர்.

பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ.. தெலுங்கில் காமெடி நடிகர்… சுதாகர் கடந்து வந்த திரை வாழ்க்கை..!!

2017 ஆம் ஆண்டு சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் நடிகர் நீலு, நீலுதாத்தா என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அந்த படமே அவருக்கு கடைசி படமாக அமைந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி நடிகர் நீலு, மறைந்து விட்டாலும் அவரது காமெடியான நடிப்பு தமிழ் சினிமா இருக்கும் வரை ரசிகர்கள் மனதில் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.