என்னதான் இப்போதுள்ள நடிகர்கள் அதிகப் படங்கள் நடித்தாலும் அந்த காலத்து நடிகர்களுக்கு ஈடு இணை ஆகாது என்பதே உண்மை.
அதன் வரிசையில் தனது நடிப்பாலும் தனது திறமையாலும் தனது குணச்சித்திர வேடத்தாலும் இன்றுவரை மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருபவர் நடிகர் “நெடுமுடி வேணு”.
மேலும் இவர் மலையாளத்தில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “சார்லி” என்ற திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததாக காணப்பட்டது.
மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுவும் குறிப்பாக நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த “அந்நியன்’ என்ற திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரமும் அனைவராலும் பேசப்பட்டது.
இத்தகைய திறமை வாய்ந்த நடிகர் நெடுமுடி வேணு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். மேலும் இவருக்கு 73 வயது ஆகி உள்ளது.
இந்த நிலையில் அவர் உடல் நலக் குறைவால் கேரளாவின் திருவனந்தபுரத்தில் காலமானார். மேலும் இவர் தமிழில் குறிப்பாக இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவருக்கு பல முன்னணி நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.