தம்பி ரஞ்சித் உன்னை நான் பாராட்ட மாட்டேன்: நடிகர் நாசர் கடிதம்!

730f6197759b91799999f254a6c65624

ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தை பார்த்த நடிகர் நடிகர் நாசர் தம்பி ரஞ்சித் உன்னை நான் பாராட்ட மாட்டேன் என கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சமீபத்தில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் 

இந்த நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் சற்றுமுன் இந்த படத்தை பார்த்து தனது கருத்தை லெட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’தம்பி ரஞ்சித் உன்னை நான் பாராட்ட மாட்டேன், உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து நன்றி என்று ஒரு வார்த்தை மனதார சொல்வேன். இப்படி ஒரு படம் எம் சமூகத்திற்கு கொடுத்ததற்கு’என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித்துக்கு, நடிகர் நாசர் எழுதிய இந்த கடிதம் தற்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6f6b160294efcfc7fc808945c8bc65a4

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.