சின்னத்திரையில் பரபரப்பு!! நடிகர் நாஞ்சில் விஜயன் அதிரடி கைது..!!!

கடந்த 2020ம் ஆண்டில் பிரபல நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் குறித்து பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் நடிகைகள் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் திருமணம் தொடர்பான வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி, அவரது நண்பர் அப்பு ஆகியோர் கருத்து பதிவிட்டு இருந்தனர். அப்போது கருத்தில் அவதூறு இருந்ததாக சூர்யா தேவி மற்றும் நடிகை வனிதா ஆகியோர் அவதூறாக பரப்பி வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இதற்கிடையில் பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் என்பவரும் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் வனித்தாவிற்கு ஆதரவாகவும், சூர்யா தேவிக்கு எதிராக விமர்சனம் செய்தார். இதனால் சூர்யா தேவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதோடு நாஞ்சில் விஜயன் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து கேட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா தேவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதே சமயம் நாஞ்சில் விஜயன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையில் நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் நாஞ்சில் விஜயன் வழக்கின் விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வளசரவாக்கம் போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர். மேலும், நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.