மன்னிப்புக் கேட்ட நாகார்ஜுனா..வயதான ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட சம்பவத்திற்கு வருத்தம்..

தென்னிந்திய சினிமா ஹீரோக்களில் பணக்கார ஹீரோவாக இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ரட்சகன், தோழா, இதயத்தைத் திருடாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப் பட உலகின் முன்னனி நடிகராகத் திகழும் நாகார்ஜுனா தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். நாகார்ஜுனாவுடன் தனுஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷுட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் சென்றனர்.

நம்ம லெஜண்ட் அண்ணாச்சியா இது..? அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட Legend சரவணன்

அப்போது விமான நிலையத்தில் நாகார்ஜுனா நடந்து வரும் போது அவருடன் பேச வயதான ரசிகர் ஒருவர் அவரை நோக்கி வந்தார். உடனே பாதுகாவலர் அவரை பிடித்து தள்ளிவிட்டார். ஆனால் நாகார்ஜுனா இதனைக் கவனிக்கவில்லை. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் நாகார்ஜுனாவுக்கு நிறைய கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து இன்று நாகார்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், இச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது என என் கவனத்திற்கு வந்தது. அந்த வயதான நபரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்.” என நாகார்ஜுனா கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews