மறக்க முடியுமா பன்முக கலைஞர் நாகய்யாவை..? அவர் விற்ற இடம் தான் இன்று விஜயா ஃபோரம் மால்..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி  குணச்சித்திர நடிகர் நாகய்யா  சென்னை வடபழனியில் 52 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவர் ஒரு கட்டத்தில் அந்த நிலத்தை விற்று விட்ட நிலையில் அந்த இடத்தில் தான் தற்போது விஜயா ஃபோரம் மால் இருப்பதாக கூறப்படுவது உண்டு.

நடிகர் நாகய்யா ஆந்திராவைச் சேர்ந்தவர். 1904 ஆம் ஆண்டு பிறந்த இவர்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய கல்வி உதவித்தொகையில் தான் பட்டப்படிப்பு படித்தார். ஆந்திரா அரசாங்கத்தில் சில காலம் வேலை பார்த்த அவர் அதன் பின்னர் சுதந்திர போராட்ட வீரராக மாறினார்.

முதல் படமே காணாமல் போனது.. குணச்சித்திர நடிகர் கே.கே.சௌந்தர் கடந்த பாதை..!

அகமதாபாத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிறுமியாக இருக்கும் போது அவர் முன் சுதந்திர பாடல்களை பாடினார். அவர் பாடலை பாடி முடித்ததும் நீங்கள் பாடியது எந்த மொழி என்று சிறுமியாக இருந்த இந்திரா காந்தி கேட்டதாகவும் கூறப்பட்டது

மகாத்மா காந்தி, நேருவின் சுதந்திர போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தார். குறிப்பாக தண்டி யாத்திரையில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் தான் அவருடைய மனைவி இறந்ததால் அவர் வாழ்க்கையில் மிகவும் சோகமானார். இதனை அடுத்து அவர் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் அடைக்கலம் ஆனார். இந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தனது படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று அவரை கூப்பிட்ட போது தான் அவர் திரை உலகிற்கு முதன் முதலாக சென்றார்.

பாரதிராஜாவின் முதல் நாயகி.. கண்களால் நடிக்கும் நடிகை அருணா..!

அதன் பிறகு நாகய்யா நடிகரானார். நடித்த முதல் திரைப்படம் கிரகலட்சுமி என்ற தெலுங்கு படம். தமிழில் எம்ஜிஆர் நடித்த அசோக் குமார்  என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார். தெலுங்கில் 177 படம் தமிழில் 93 படம் என மொத்தமாக அவர் 270 படங்களில் நடித்துள்ளார். சுமார் 20 படங்களுக்கு மேல் அவர் இசையமைத்துள்ளார். 160 பாடல்களை பாடி உள்ளார்.

பல திரைப்படங்களில் அவர் அப்பா தாத்தா வேடங்களில் நடித்தார். சில படங்களில் அவர் கடவுள் வேடத்தில் நடித்திருக்கிறார். தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் உங்கள் மூலம் நான் கடவுளை பார்த்தேன் என்று தலைவர் கலைவாணர் என்எஸ்கே அவரது நடிப்பை பாராட்டி இருக்கிறார்.

மேலும் நடிகர் நாகய்யா ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ளார், தயாரித்தும் உள்ளார். தெலுங்கில் அவர் மூன்று படங்களை இயக்கிய நிலையில் தமிழில் அவர்  என் வீடு என்ற படத்தை இயக்கினார்.

தமிழில் உருவான ஏழை படும் பாடு என்ற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் ஒரு பிரெஞ்சு நாவலின் தழுவல். இந்த படத்தை புதுச்சேரியில் பார்த்த பிரான்ஸ் இன மக்கள் அவரை தெய்வமாக வழிபட்டதாகவும் கூறப்பட்டது

நடிகர் நாகய்யா எம்ஜிஆர், சிவாஜி உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  குறிப்பாக  சிவாஜி கணேசன் நடித்த செல்வம்,  நவராத்திரி,  இரு மலர்கள்,  தெய்வமகன்,  எங்கிருந்தோ வந்தாள், ராமன் எத்தனை ராமனடி,  சம்பூர்ண ராமாயணம், நீதி,  ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நம் நாடு திரைப்படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

வரும், ஆனா வராது.. லட்சக்கணக்கில் சம்பளம் பெறாமல் ஏமாந்த நடிகர் என்னத்த கண்ணய்யா..!!

நடிகர் நாகய்யா சென்னை வடபழனியில் 52 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்தார். அந்த இடத்தில் அவர் ஒரு ஸ்டூடியோ கட்ட நினைத்த போது தான் அவரது இடத்திற்கு அருகில் வாகினி ஸ்டூடியோ கட்டப்பட்டு கொண்டிருந்தது. அதனால் அவர்தான் ஸ்டுடியோ கட்டும் திட்டத்தை கைவிட்டார். அதன் பிறகு அவர் அந்த நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டார். அந்த நிலம் தான் பின்னாளில் வாகினி ஸ்டுடியோவாக மாறியது. அதன் பிறகு தற்போது விஜயா ஃபோரம் மால் ஆக மாறி உள்ளது. ஏவிஎம் நிறுவனத்தின் கல்வி நிறுவனங்கள் உள்ள இடமும் ஒரு காலத்தில் நடிகர் நாகய்யா வைத்திருந்த இடம் தான் என கூறப்படுவதுண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...