#RIP நடிகர் மயில்சாமி எங்கள் குடும்பத்தில் ஒருவராக பழகுவார்… உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

இந்த தகவலை மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தி உள்ளார். தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் மெக்கானிக் கமலின் நண்பராக ஒருவராக நடித்து வெளிச்சம் பெற்றார்.

அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து அசத்தினார். ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கடைசியாக தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் டப்பிங் பணியை கூட முடித்துவிட்டு வந்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியது:

மயில்சாமி இறந்தது மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது, நல்ல மனது கொண்டவர் மயில்சாமி எங்கள் குடும்பத்தில் ஒருவராக பழகுவார், அனைவரிடமும் அன்பாக பேசுவது மட்டுமில்லாமல அனைவரிடத்திலும் அன்பாக இருப்பார்

அவர் குடும்பத்திற்காகவும் அவருக்காகவும எந்த உதவியும் கேட்டதில்லை, அவர் மறைவு என்பது மிகப்பெரிய இழப்பு தலைவரிடமும் கட்சி சார்பிலும் அனைவரிடமும் பாசமாக பேசி அன்பை செலுத்த கூடியவர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.