பொண்ணுக்காக போராடும் அப்பாவாக கலங்க விடும் மோகன்!.. ஹீரோவாக அசத்தினாரா?.. ஹரா விமர்சனம்!..

நடிகர் மோகன், அனுமோல், யோகி பாபு, அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, சாருஹாசன், சுரேஷ் மேனன், சிங்கம்புலி மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹரா திரைப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். ரசாந்த் அர்வின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரகாஷ் முனுசாமி ஒளிப்பதிவில் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது.

ஹரா விமர்சனம்:

சுட்டப்பழம் எனும் பலான படத்தில் 14 வருடத்திற்கு பிறகு மோகன் நடித்திருந்த நிலையில், அதன் பின்னர் தற்போது ஆக்‌ஷன் ஹீரோ அவதாரமெடுத்துள்ளார். விஜய்யின் கோட் படத்திலும் இவருக்கு ஆக்‌ஷன் ரோல் தான் எனக் கூறுகின்றனர். அதிகபட்சமாக தீவிரவாதி கதாபாத்திரம் இருக்கும் என தெரிகிறது.

இந்த படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன் தனது மகள் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்துக் கொள்ள தாவூத் இப்ராஹிமாக மாறுகிறார். கோயம்புத்தூர் கல்லூரியில் படித்து வந்த பாசமான மகள் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த நிலையில், அவரது மரணத்துக்கு பின்னணியில் ஒரு பெரிய மருத்துவ மாஃபியா கும்பல் இருப்பதாக கண்டு பிடிக்கிறார்.

தன்னுடைய மகளின் மறைவுக்காக ஏகப்பட்ட எதிரிகளை திட்டமிட்டு பழிவாங்குகிறார் மோகன். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் சாருஹாசன் இந்த படத்தில் நடித்துள்ளார்.

அனுமோல், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் என பலர் நடித்திருந்தாலும் யாருக்கும் சரியான கதாபாத்திரங்களை இயக்குநர் கொடுத்து வேலை வாங்கவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. மோகன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில், திறமையான இயக்குநர் படத்தில் அறிமுகம் ஆகியிருக்கலாம்.

அல்லது விஜய்யின் கோட் படம் வெளியான பின்னர் இந்த ஹரா படத்தை வெளியிட்டு இருக்கலாம். கோட் படத்துக்கு முன்பாகவே ஹரா வந்தது கோட் படத்திற்கும் சிக்கலை விளைவிக்கும் என்றே தெரிகிறது.

கல்லூரியில் பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்த முயற்சிப்பது, தவறான மருந்துகளை விற்று பணம் சம்பாதிப்பது என வில்லன் கேங் வழக்கமான வில்லத்தனத்தை செய்ய அவர்களை அழிக்க வந்த அசுரனாக கள்ள்த் துப்பாக்கியுடன் மோகன் சூரசம்ஹாரம் செய்யும் கதை தான் இந்த ஹரா.

ஹரா: அரைகுறை!

ரேட்டிங்: 2/5

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...