நடிகர் மகேஷ்பாபுவுக்கு கொரோனா பாதிப்பு- அவரது ரசிகர்கள் கடும் கவலை

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா திரைப்பிரபலங்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் அருண் விஜய், நடிகர் வடிவேலு, இயக்குனர் டி.பி கஜேந்திரன் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் நடிகர் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு மகேஷ்பாபுவுக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் அளவு ரசிகர்கள் மகேஷ்பாபுவுக்கு உள்ளார்கள் . மகேஷ்பாபுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சோர்வுற்றுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment