சீனியர்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்… நடிகர் மாதவன் ஓப்பன் டாக்!!

மாதவன்  பனேகி அப்னி பாத் என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார், இவர் இஸ் ராத் கி சுபாக் நகின் என்னும் இந்திப் படத்தின்மூலமே சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்தார்.

இவர் மணிரத்தினத்தின் காதல் படமான அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழில் கால் பதித்தார், முதல் படத்திலேயே தனது காதல் வசனங்கள்மூலம் சாக்லேட் பாயாக மாறினார். இந்தப் படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆனபோதிலும் காதலர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த படமாக அது உள்ளது.

5125093f2cfef540c991f4aae30df983

சினிமாவில் கால் பதித்து பல ஆண்டுகள் ஆன போதிலும் இவருக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இவர் கடைசியாக நடித்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்கள் மாஸ் ஹிட் ஆகின. இந்த இரண்டிலும் இவரது கதாபாத்திரம் வேறுலெவலாக இருந்தது.

ஊரடங்கு காலத்தில் ஓய்வில் இருந்துவரும் மாதவன் கல்லூரி நாட்கள் குறித்துப் பேசியுள்ளார். அதாவது, “நான் கல்லூரி படித்தபோது எனக்கு நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருந்ததாக பல வதந்திகள் வந்தன. ஆனால் எனக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தார்களே தவிர கேர்ள் பிரண்ட்ஸ் கிடையாது.

இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாய் நான் நினைக்கிறேன். பெண் நண்பர்கள் இருந்ததாலோ என்னவோ சீனியர்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews