Entertainment
வில்லனாக மாறிய பிரபல ஹீரோ: கவுதம் மேனன் தகவல்

தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்த பல நடிகர்கள் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் வில்லனாக மாறிய வரலாறு உண்டு. ஜெய்சங்கர் முதல் பல ஹீரோக்கள் வில்லனாக மாறியுள்ளனர் என்பதும் வில்லனாக நடித்த ரஜினி, சத்யராஜ் போன்றவர்கள் ஹீரோவாக மாறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கழுகு, யாமிருக்க பயமேன், உள்ளிட்ட பல திரைப் படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் கிருஷ்ணா தற்போது முழுநேர வில்லனாக மாறியுள்ள தகவலை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கிவரும் ’ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக நடிக்க வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குநர் கவுதம் மேனன் உறுதி செய்துள்ளார்
இந்த படத்தில் வருண் என்ற இளம் நடிகர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக ராஹே என்ற அறிமுக நடிகை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பதும் கார்த்திக் என்பவர் இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்தது
