Connect with us

நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

kamal vikram

பொழுதுபோக்கு

நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

தற்போது தமிழ் சினிமாவில் என்னதான் அதிக அளவிற்கு நடிகர்கள் வந்தாலும் பலரும் மதிக்கத்தக்க மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு உள்ளவர்தான் நடிகர் கமலஹாசன்.

இவர் எந்தவொரு கதாபாத்திரத்தையும் மிகவும் துள்ளியமாக நடிக்கும் ஆற்றலை பெற்றுள்ளவர். அதிலும் குறிப்பாக இவரது படங்கள் அனைத்தும் இவரது நடிப்பிற்கு ஆகவே பார்க்கலாம் என்பது போலத்தான் காணப்படும்.

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் முன்பதாக தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தினை இயக்கி இருந்தார். அந்த திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் கொண்டு விக்ரம் என்ற திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளம் உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு படக்குழுவினர் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இவ்வாறுள்ள நிலையில் எப்போது விக்ரம் திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில் அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் அடுத்தடுத்து கோடை விடுமுறைகளில் மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top