Connect with us

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கல்லா கட்டும் கமல் ! சீசன் 6 எப்போ ஆரம்பம் தெரியுமா ?

22 631ecf1a5a44c

பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கல்லா கட்டும் கமல் ! சீசன் 6 எப்போ ஆரம்பம் தெரியுமா ?

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 6வது சீசனுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது, இது பிரபலமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு விண்ணப்பிப்பதற்கான திறந்த அழைப்பாக அது அமைந்தது. அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் செப்டம்பர் மாதத்தில் திரும்பி வந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் ஆறில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.

22 631d9faf28a2e

தனுஷிற்காக இறங்கி வந்த கேப்டன் மில்லர் படக்குழு ! அடுத்த சேடுல் குறித்து மாஸ் அப்டேட் !

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் விக்ரம் பட பாணி டயலாக் உடன் ப்ரோமோ அண்மையில் வெளிவந்து மக்கள் மனதை வெகுவாக ஈர்த்தது.மேலும் இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்க போவதாக தகவல் வந்துள்ளது.அக்டோபர் 2ஆம் தேதி முதல் பிக் பாஸ் 6 துவங்குகிறது.

இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் வாங்க போவதாகதகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்காக கமல் ஹாசன் ரூ. 55 கோடி மட்டும் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தற்போழுது விகாரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top