நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் இந்தியன் 2 மற்றும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இதனிடையே சாதாரண சளி மற்றும் காய்ச்சல் காரணமாக காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசனின் உடல்நலம் படிப்படியாக முன்னேற்றம் அடைவதால் சிகிச்சை முடிந்து தற்போது இல்லத்திற்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், இந்த வாரம் நடக்கப்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிழவுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.