ஸ்டார் படத்தால் மீண்டும் ஸ்டாரான காதல் சுகுமார்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்து அசத்தல்

சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து நடிகர்கள் பீல்டில் இருந்து கொண்டே இருந்தால் தான் ரசிகர்கள் அவர்களை நினைவில் வைத்திருப்பார்கள். கொஞ்சம் இடைவெளி விட்டால் கூட அவர்களது முகத்தை மறந்து விடுவார்கள். எனவேதான் நடிகர்கள் பலர் எந்தக் கதாபாத்திரம் கிடைத்தாலும் தங்கள் சினிமாவில் தலைகாட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனால் நடித்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்று அதன்பின் காணாமல் போன நடிகர் ஒருவர் தற்போது கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அந்த நடிகர்தான் காதல் சுகுமார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004-ல் வெளியான காதல் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பாதிவரை காமெடியனாகவும், பாதிக்கு மேல் குணச்சித்தர நடிகராகவும் நடித்தார். காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசனுடன் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

பார்ப்பதற்கு வடிவேலுவின் சாயலை ஒட்டி இருந்ததால் வடிவேலுக்கு மாற்றாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதன்பின் அவர் இயக்குநராக 2015, 2016-ல் திருட்டி விசிடி, சும்மா ஆடுவோம் போன்ற படங்களில் பணிபுரிந்தார்.

மாதுரி தீட்சத் நடித்த முதலும் கடைசியுமாக நடித்த ஒரே தமிழ்ப்படம்.. பாதியிலேயே பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்

கடந்த 9 ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்த நிலையில் மீண்டும் தற்போது கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தாடி வளர்த்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். இவரது இந்தக் கதாபாத்திரம் சினிமாவில் அவருக்கு கம்பேக் கொடுத்துள்ளது. ஸ்டார் படத்திற்காக 6 மாதங்களாக தாடி வளர்த்திருக்கிறார். இதற்காகவே இவருக்கு ரூ.30,000 சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

இவரது காலத்தில் வந்த சூரி, யோகிபாபு, சந்தானம் போன்ற நடிகர்கள் இன்று சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நிலையில் திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் அமையாததால் காதல் சுகுமார் திரை மறைவிலேயே இருந்தார். தற்போது ஸ்டார் படம் இவருக்கு மீண்டும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளதால் இயக்குநர்கள் பலர் அவர் வீட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...