சார்பட்டா பரம்பரை ‘டாடி’ ஜான் விஜய்யின் மாமனார் இந்தப் பிரபல அரசியல்வாதியா?

சார்பட்டா பரம்பரை படத்தில் மூலம் டாடியாக நம் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் தான் ஜான் விஜய். அதற்கு முன்னர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சார்பட்டா பரம்பரை படம் இவரது திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக அமைந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஜான் விஜய் சென்னையில் இருந்து ஒலிபரப்பாகும் ரேடியோ ஒன் எப்.எம்-ன் தலைமை நிகழ்ச்சி இயக்குநராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். மேலும் H2o என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஜான் விஜய்.

தமிழில் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ஓரம்போ திரைப்படத்தில் சென்னைத் தமிழ் பேசும் பிச்சை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் வசன உச்சரிப்பு, திரைமொழி ஆகியவை ஜான் விஜய்யை தனித்துவமாகக் காட்டியது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முரட்டு வில்லனாகவும், காமெடிக் கதாபாத்திரத்திலும் நடித்துப் பெயர் பெற்றார். குறிப்பாக போலீஸ் கதாபாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

கண்டக்ராக பணியாற்றிய போது ரஜினி பட்ட கஷ்டங்கள்.. பின்ன சும்மாவா வந்துச்சு சூப்பர் ஸ்டார் பட்டம்

நடிகர் ஜான் விஜய் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். இவரது மனைவி மாதவி. ஜான் விஜய் இவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்ததும் தன் காதலைத் தெரிவித்திருக்கிறார். பின்னர் மாதவியும் ஓகே சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர்.

இதன்பின்னர் தன்னுடைய காதலை மாதவி தன்வீட்டில் சொல்லியிருக்கிறார். மாதவியின் தந்தை ஓர் பிரபல அரசியல் வாதி. வேறுயாருமல்ல திமுக-வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தான். நாடாளுமன்ற ராஜ்சபா உறுப்பினராகவும், சென்னை வடக்குத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

இவ்வாறு ஜான் விஜய் தனது மாமனார் பிரபல அரசியல்வாதி என்பது தெரியாமல் மாதவியைக் காதலித்திருக்கிறார். மாதவி வீட்டில் தன் காதலைத் தெரியப்படுத்த டி.கே.எஸ். இளங்கோவன் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். அதன்பின் இவர்களது நிச்சயம் நடைபெற்ற போதுதான் ஜான் விஜய்-க்கு தனது மனைவியின் தந்தை பிரபல அரசியல்வாதி என்பதே தெரியுமாம். பின்னர் இருவரது திருமணமும் நடைபெற்றது. தற்போது ஜான் விஜய் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews