நடிகராக ஜெயித்த விக்ரமின் தந்தை.. மூன்று தலைமுறையாக கலக்கும் பிரபல நடிகரின் குடும்பம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ப. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள தங்கலான் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இதனிடையே, விக்ரமின் தந்தையான வினோத் ராஜும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் என்பது பலரும் அறியாத தகவல். நடிகர் விக்ரமின் அப்பா பெயர் வினோத் ராஜ். இவரது இயற்பெயர்  ஜான் ஆல்பர்ட் விக்டர். தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கேரக்டர்களில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சுசிகணேசன் இயக்கத்தில் உருவான கந்தசாமி திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல, தரணி இயக்கத்தில் உருவான கில்லி திரைப்படத்தில் த்ரிஷா அப்பாவாகவும் நடித்திருக்கிறார்.

வினோத் ராஜ் பரமக்குடியில் பிறந்தவர். இவருக்கு மூன்று மகன்கள் உண்டு. அதில் ஒருவர் தான் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. மனைவி ராஜேஸ்வரியின் சகோதரர் தான் நடிகர், இயக்குனர் தியாகராஜன் என்பதும் அவருடைய மகன் தான் நடிகர் பிரசாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vinod raj1

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த வினோத் ராஜ், மலையூர் மம்பட்டியான் என்ற தியாகராஜன் நடித்த படத்தில் தான் முன்னணி நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர்  காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கொடி பறக்குது என்ற திரைப்படத்தில் ஜெயிலர் மெய்யப்பன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

1988 ஆம் ஆண்டு கொடி பறக்குது திரைப்படம் வெளியான நிலையில் அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து தான் விஜய், த்ரிஷா நடித்த கில்லி திரைப்படத்தில் த்ரிஷா அப்பாவாக நடித்தார் வினோத் ராஜ். அதன் பிறகு தொடர்ச்சியாக அவர் சில படங்களில் நடித்தார். குறிப்பாக விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய் அப்பாவாக நடித்திருப்பார். தொடர்ந்து மதராசி, தம்பி, திருட்டுப் பயலே, பச்சைக் குதிரை, மனதோடு மழைக்காலம், மாயக்கண்ணாடி, மச்சக்காரன், சத்தியம் போன்ற படங்களில் நடித்த நிலையில் மகன் விக்ரமுடன் இணைந்து கந்தசாமி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருந்தார்.

vinod raj2

இதனைத் தொடர்ந்து அரவான் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்த வினோத் ராஜ், கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் நடிக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வினோத் ராஜ் காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்,

நடிகர் வினோத் ராஜ், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என மூன்று தலைமுறைகளாக தமிழ் திரை உலகில் நடிகர்களாக இருந்து வரும் நிலையில், அனைவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர்கள் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.