அதிர்ச்சி! நடிகர் சலபதி ராவ் மாரடைப்பால் உயிரிழப்பு..!!

கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மரணம் அடையும் நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பழம்பெரும் நடிகர் சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். குறிப்பாக தமிழில் வெளிவந்த அருந்ததி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருடைய மகன் ரவி பாபு என்பவர் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் தான் ஒப்பந்தமாகி இருந்த படங்களில் விலகி இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் சினிமா பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகர் சலபதி ராவ்வின் குடும்பத்தினருக்கு தங்களது வருத்தத்தினை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.