ரஜினி வசனம் தான் டைட்டில்.. சூர்யாவுக்கு அதிரடி கதையை சொன்ன பிரபல நடிகர்.. கங்குவாவால் வந்த ட்விஸ்ட்…

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான நிறைய திரைப்படங்கள் திரை அரங்கில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், அதே வேளையில் கொரோனா காலகட்டத்தில் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அது மட்டுமில்லாமல், சூர்யாவிற்கு சூரரைப் போற்று தேசிய விருதையும் வென்று கொடுத்திருந்தது. அதே வேளையில், சூர்யா ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி படமாக அமையவில்லை. ஆனால், அதே நேரத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக இறங்கி கேமியோவில் சூர்யா கலக்கிய விக்ரம் திரைப்படம், அவரது கேரக்டருக்கு அதிக பாராட்டுக்களை பெற்று கொடுத்திருந்தது.

இதனிடையே, நீண்ட நாட்களாக சூர்யாவிற்கு கைகொடுக்காமல் திரை அரங்கு ஹிட் நிச்சயம் அடுத்த சில படங்களில் சரியாகி விடும் என் தெரிகிறது. அந்த வகையில் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். வரலாற்று கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூழலில் 3டி தரத்திலும் தயாராகின்றது.

சிவா பொதுவாக கமர்சியல் திரைப்படங்களை மிக அசத்தலாக எடுத்து வரும் சூழலில் இப்படி ஒரு வரலாற்று பின்னணி கொண்ட கதையை அதிக பொருட்செலவுடன் இயக்கி வருவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவும் படத்தில் சூர்யாவின் கெட்டப்பும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க, கங்குவா ரிலீஸ் தேதி எப்போது என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்து வருகின்றனர்.

கங்குவா படைத்த தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றிலும் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் நிச்சயம் தியேட்டர் ஹிட்டை அடுத்த இரண்டு படங்களில் சூர்யா கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான் ரசிகர்கள் உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் பிரபல நடிகரும் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா, சூர்யாவை இயக்கும் வாய்ப்பை குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். அஜித் நடிப்பில் உருவான வீரம் படத்தில் அவருக்கு சகோதரராக பாலா நடித்துள்ளார். இது தவிர இன்னும் நிறைய படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார் பாலா.
Bala Liver Transplant: Malayalam actor Bala admitted to hospital, to undergo liver transplant - The Economic Times

இவர் சூர்யாவை இயக்கவிருந்த திரைப்படம் பற்றி சில கருத்துக்களை ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். “கங்குவா படத்திற்கு முன்பாக நான் கிரீன் ஸ்டுடியோவில் சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி இருந்தேன். சில தனிப்பட்ட காரணங்களால் நேரம் தள்ளிப் போனது. வருங்காலத்தில் நிச்சயம் அந்த படத்தை இயக்குவேன். ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பது தான் படத்தின் டைட்டில். ‘என் இறுதி ஆயுதம் நான்’ என்ற எனது கேப்ஷன் சூர்யாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

தனது குடும்பத்தினர், பணம், ஆயுதங்கள் என அனைத்தும் போனாலும் தான் எழுந்து நிற்பது வரை எதிர்ப்பேன் என்பது தான் அந்த கதையின் லைன். கங்குவா படத்தின் ரிலீசிற்கு பின் இந்த கதை பற்றி நிச்சயம் பேசி அதை ஆரம்பிப்பதற்கான வழிகளில் இறங்குவோம்” என பாலா கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews