பொழுதுபோக்கு
நடிகர் சங்க தேர்தல் ரத்து
நடிகர் சங்க தேர்தல் நடக்கும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அதே தினத்தில் எஸ்.வி சேகரின் நாடகம் நடப்பதாக கூறப்பட்டது பெரும் குழப்பத்தில் இந்த பிரச்சினை கோர்ட்டுக்கு சென்றது. விசாரித்த கோர்ட் தேர்தலை நடத்த வேறு இடம் பார்ப்பதற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தென் சென்னை மாவட்ட பதிவாளர் சங்கம் நடிகர் சங்க தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பாக போட்டி இட்ட இயக்குனர் பாக்யராஜ் இது குறித்து பின்னர் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
