“என் மனைவிக்கு நான் ஒண்ணும் ஓனர் இல்ல“ : கீர்த்தி பாண்டியன் பற்றி அசோக் செல்வன்

தமிழில் குறும்படங்களில் நடித்துவந்த அசோக்செல்வன் சூது கவ்வும் படத்தின் மூலம் வெள்ளித் திரையில் தலைகாட்டத் தொடங்கினார். தெகிடி படத்தில் ஜனனிஐயருடன் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல ஹீரோ அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் கெஸ்ட் ரோல், செண்ட் ஹீரோ என நடித்து வந்தவர் ஓ மை கடவுளே படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

தொடர்ந்து சரத்குமாருடன் இணைந்து இவர் நடித்த போர்த்தொழில் படம் இவருக்கு திருப்புமுனையைக் கொடுத்தது. இந்தப் படத்தில் ஹிட்டால் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

அண்மையில் நடிகரும், அரசியல்வாதியுமான அருண்பாண்டியன் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்துக் கரம் பிடித்தார். இவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 13-ல் கோலாகலமாக தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

இளையராஜா எல்.ஆர். ஈஸ்வரியை ஒதுக்கிய காரணம் இதானா? இருந்தும் பாட வைத்த ஒரே ஒரு பாட்டு!

இந்நிலையில் தனது மனைவியான கீர்த்தி பாண்டியன் குறித்து பேட்டி ஒன்றில் அசோக் செல்வன் கூறியதாவது, “எனது மனைவி கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஒன்றும் ஓனர் அல்ல. லைப் பார்ட்னர் மட்டுமே. அவருக்கு பிடித்தவற்றை செய்வதே எனக்கு முழுமையான சந்தோஷம். அவர் எதை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அதில் ஈடுபடட்டும். அதை நான் முழுமையாக வரவேற்கிறேன். இருந்த போதிலும் எங்களுக்குள் கலந்துரையாடல் இருக்கும். எனவே அவருடைய லட்சியம், பாதைகளுக்கு நான் என்றும் தடையாக இருக்கப் போவதில்லை.“ என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலகட்டங்களில் அசோக் செல்வன் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவரது கேரெக்டர்கள் பேசப்படாமல் இருந்தது. இருப்பினும் தன்னுடைய முயற்சியினாலும், கதை தேர்விலும் கவனத்தாலும் தொடர்ந்து கவனிக்க வைக்கும் படங்களில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் தலைகாட்டி வருகிறார். இதனால் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் அசோக் செல்வனும் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்பதில் ஐயமில்லை.

இதனிடையே இவருடைய மனைவியும் நடிகையுமான கீர்த்திபாண்டியனும், இவரும் இணைந்து நடித்துள்ள புளு ஸ்டார் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.