சின்னத்திரையில் பரபரப்பு!! நடிகர் அர்ணவ் அதிரடி கைது..!!!

நடிகர் அர்ணவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 வாரங்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பேசும் பொருளாக இருந்து வந்தது சின்னத்திரை நடிகர் அருண் மற்றும் அவரது மனைவி திவ்யா விவகாரம்.

இந்நிலையில் கர்ப்பிணியான என்னை தாக்கியதாகவும் அவருடன் சீரியலில் நடிக்கும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதன் பெயரில் கொலை மிரட்டல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் பலமுறை அழைத்தும் அவர் ஆஜராகாமல் இருந்தார்.

இதனிடையே போலீசார் அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, இன்றைய தினத்தில் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்ததால், தற்போது நேமம் என்ற இடத்தில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவை, போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment