
பொழுதுபோக்கு
திரையுலகமே அதிர்ச்சி…!!!! நடிகர் அர்ஜூன் தாயார் மரணம்;;;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜூன் தாயார் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
90 கிட்ஸ்-களில் டாட் ஸ்டாராக இருந்தவர் நடிகர் அர்ஜூன். இவரது தாய் லட்சுமி தேவம்மா தன்னுடைய 85-வது வயதில் காலமானதாக கூறப்படுகிறது. இவர் மைசூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாக தெரிகிறது.
இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் மூத்த மகன் கிஷோர் சர்ஜா கன்னட இயக்குனராகவும், இரண்டாவது மகன் அர்ஜுன் நடிகராகவும் உள்ளார்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டு பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
