
Entertainment
நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் வைரலாகும் புகைப்படம்!!.. என்ன வைத்துள்ளார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் அஜித்குமார். இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ரசிகர்கள் கொண்டாட தவறியது கிடையாது. நாளுக்கு நாள் இவரின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அஜித் ரசிகர்கள் அவரை படத்தில் ரசித்த காட்டிலும் அவர் தனிமனித வாழ்க்கையில் கடைபிடிக்கும் கொள்கைக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். “முதல்ல உன்னைப் பார்க்க உன் குடும்பத்தை பார்க்க நேரம் கிடைத்தால் என் படங்களை பார்” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டார்.
ரசிகர்கள் தனக்காக பணத்தை செலவு செய்து பால் அபிஷேகம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவதை விரும்பாத அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவர்மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அந்த அன்பு அந்த அளவுக்கு உண்மைதான் என்றுதான் சொல்லணும். மேலும் கடந்த ஆண்டு அஜித் தல என்று அழைக்க வேண்டாம், அஜித் குமார் என்று அழைத்தால் போதும் ஒரு அறிக்கை விட்டார். எனவே ரசிகர்கள் தனக்காக நிறைய நேரங்களையும் பணத்தையும் செலவழிப்பதும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபடுவது உணர்த்துவதற்காகவே இதுபோன்ற கோரிக்கைகளை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. நேர்கொண்டபார்வை வெற்றிக்கு பிறகு மீண்டும் அவர்களின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது இருப்பினும் படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது என இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியள்ளது குறிப்பிடத்தக்கது.
விருமன் படத்துடன் மோதுவது இந்த ஹீரோவோட படமா?.. வெளியான மாஸ் அப்டேட்!!..

