இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை!: அமைச்சர் சுப்பிரமணியன்;

நேற்றைய தினம் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் பற்றி தகவல் வெளியானது. அதன்படி எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூபாய் 13610 கல்வி கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு பிடிஎஸ் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 11 ஆயிரத்து 610 ரூபாய் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி தேர்தல் பிரச்சாரங்களிலும் பேசப்பட்டன. இந்த நிலையில் இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஆண்டு 50 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். இந்த தகவலை மதுரையில் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment