இழந்துபோன குழந்தைகளின் படிப்பை ஈடு செய்ய நடவடிக்கை!

தற்போது நம் தமிழகத்தில் சில நாட்களாக தான் பள்ளிகள் திறந்துள்ளது. அதுவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சிறியவர்களின் படிப்பு இழந்துபோனதாக காணப்படுகிறது.மு க ஸ்டாலின்

இந்த பள்ளி திறக்காததால் பல குழந்தைகள் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். பலரும் ஊர் சுற்று கின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழகத்தில் தன்னார்வலர்கள் கொண்டு கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரூபாய் 200 கோடி மதிப்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் தன்னார்வலர்கள் கொண்டு பள்ளி நேரத்துக்குப் பிறகு இழந்த கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இழந்துபோன படிப்பை முறையீடு செய்வதற்கான இந்த திட்டத்தை தமிழகத்தில் விரைவில் தொடங்கி வைக்க உள்ளேன் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.இதனால் குழந்தைகளின் படிப்பு தரம் படிப்படியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment