மராட்டியத்தில் அதிரடி சோதனை: துணை முதல்வரின் ரூ.1000 கோடி சொத்து முடக்கம்!

நம் தமிழகத்தில் அண்மைக்காலமாக வருமானவரித்துறை சோதனை அதிகமாக இருந்தது.இந்த சோதனை  முதலில் எதிர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.வருமான ஒழிப்புத்துறை

அதன் பின்னர் அரசு அலுவலகங்களில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. அதில் ஏராளமான கணக்கில் காட்டாத பணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது மராட்டிய மாநில துணை முதல்வர் வீட்டிலேயே நடைபெற்றுள்ளதாக காணப்படுகிறது.

இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து முடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பாவருக்கு சொந்தமான ரூபாய் ஆயிரம் கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது.

அஜித் பாவரின் வீடு, அலுவலங்களில் நடைபெற்ற சோதனையை அடுத்த வருமானவரித் துறையினர் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அஜித் பாவருக்கு சொந்தமாக மும்பை நகரில் நாரிமன் பாயிண்ட் இல்ல நிர்மல் டவர் கட்டிடம் உள்ளது. இதனை அடுத்து அந்த நிர்மல் டவர் கட்டிடம் உள்பட 5 சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment