Entertainment
’மாஸ்டர்’ படக்குழுவினர்களின் அதிரடி முடிவு: அப்செட்டான ரசிகர்கள்
தளபதி விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’மாஸ்டர்’ படத்தின் டிரைலர் இனி வெளியாக வாய்ப்பில்லை என்றும் நேரடியாக படமே வெளியாகும் என்பது தான் படக்குழுவினர்களின் முடிவாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது
இரண்டு நிமிட டிரைலர் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகவும் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது அந்த டிரைலரை படக்குழுவினர் வெளியிட வில்லை என்பது ரசிகர்களுக்கு உண்மையிலேயே அப்செட் ஆன விஷயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ’மாஸ்டர்’ படம் ரிலீசாக இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இசையில் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்
